நெற்பயிர் காப்பீடு கட்டணத்தை குறைக்கக் கோரிக்கை

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் நெற்பயிர் காப்பீட்டுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் நெற்பயிர் காப்பீட்டுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
 வெள்ளக்கோவில் வட்டாரத்தில் முத்தூர், சின்ன முத்தூர், வேலம்பாளையம், ஊடையம், மங்கலப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம், வள்ளியிரச்சல், புதுப்பை, லக்கமநாய்க்கன்பட்டி ஆகிய 11 வருவாய் கிராமங்கள் பயிர் காப்பீடு செய்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கிராமங்களில் வேளாண்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏக்கருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ. 440 என அறிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி தெரிவித்துள்ளார்.  
 இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com