பல்லடத்தில் கொசுப் புழுக்கள் உள்ள வீடுகளைக் கண்டறிய காலண்டர்

பல்லடம் நகராட்சிப் பகுதியில் கொசுப்புழுக்கள் உள்ள வீடுகளைக் கண்டறியும் வகையில் வீடுகள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக காலண்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பல்லடம் நகராட்சிப் பகுதியில் கொசுப்புழுக்கள் உள்ள வீடுகளைக் கண்டறியும் வகையில் வீடுகள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக காலண்டர் ஒட்டப்பட்டுள்ளது.
  தமிழகம் முழுவதும், டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலை ஒழிக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பல்லடம் நகராட்சிப் பகுதியில் கொசுகள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிய 12 ஆயிரம் வீடுகளில் 52 வார வருடாந்திர காலண்டர் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீட்டின் முன்புறக் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.
    இதன் மூலம் வீட்டின் உரிமையாளர்கள் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், கொசு ஒழிப்பில் அக்கறை
கொண்டவர்களாகவும் தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். வாரந்தோறும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள்
வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து வீட்டில் கொசுப் புழுக்கள் உள்ளதா, இல்லையா என்பதை கதவில் ஒட்டப்பட்டுள்ள காலண்டரில் பதிவு செய்வார்கள். 
   கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் வீட்டின் உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் முதல் கட்டமாக நோட்டீஸ் விநியோகிக்கும். தொடர்ந்து கொசு ஒழிப்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தரவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   வீடுகளில் இத்தகைய காலண்டர்களை ஒட்டும் பணியை நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு செய்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com