கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி, மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம்

கொடுமுடி அருகே உள்ள சிவகிரியில் கொடுமுடி மேற்கு ஒன்றிய கொ.ம.தே.க. இளைஞரணி, மாணவரணி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை

கொடுமுடி அருகே உள்ள சிவகிரியில் கொடுமுடி மேற்கு ஒன்றிய கொ.ம.தே.க. இளைஞரணி, மாணவரணி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் சூர்யமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலத் தலைமை நிலையச் செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாநிலப் பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைச் செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றியச் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், நாமக்கல்லில் 2019 பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் 2ஆவது உலக கொங்குத் தமிழ் மாநாட்டை விளக்கி கொடுமுடி ஒன்றியம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்வது, கால்நடை உதவியாளர் பணியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
தற்போது மழைக்காலம் என்பதால் கால்நடைகளுக்கு வேகமாகப் பரவி வரும் கோமாரி நோயைக் கட்டுப்படுத்தவேண்டும்.
கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து அனைத்துக் கால்நடைகளுக்கும் கோமாரி நோய்த் தடுப்பூசி போடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட நெசவாளர் அணிச் செயலாளர் சீனிவாசன், தலைமை நிலையப் பேச்சாளர் தண்டபாணி, கொடுமுடி ஒன்றியத் தலைவர் சண்முகம், பொருளாளர் பழனிசாமி, இளைஞர் அணி செயலாளர் முத்துகுமார், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவரணிச் செயலாளர் பொன்ஹரிஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com