திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

கார்கள் மோதல்: உயிர் தப்பிய தொழிலாளி

DIN | Published: 12th September 2018 01:26 AM

காங்கயத்தில் இரு கார்கள் மோதிய விபத்தில், ஒரு கார் சாலையோரம் இருந்த கோணிப்பை தைக்கும் கடைக்குள் புகுந்தது. இதில், அங்கு இருந்த தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காங்கயத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (60). இவர், தனது வேனில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காங்கயம் நகரம், கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள எரிவாயு நிரப்பும் பங்குக்குத் செல்வதற்காக தனது வாகனத்தைத் திருப்பியுள்ளார். அப்போது எதிரில், கோவையில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. 
இதில், சசிகுமாரின் வேன் சாலையோரம் நின்றுகொண்டிருந்த மற்றொரு  வேன் மீது மோதி, அதன்பின் சாலையோரம் உள்ள சாக்குக் கடைக்குள் புகுந்தது.
இதில், கார் வருவதைப் பார்த்த சாக்கு தைத்துக் கொண்டிருந்த தொழிலாளி பழனிசாமி,  உடனடியாக அங்கிருந்து விலகித் தப்பினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. சசிக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 
அவருக்கு காங்கயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
இவ்விபத்து குறித்து காங்கயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி, மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம்
குண்டடம்  வாரச் சந்தையில் மாடுகள் விலை வீழ்ச்சி: வியாபாரிகள் கவலை
சோழீஸ்வர சுவாமி கோயிலில் அம்மையப்பர் திருக்கல்யாண உற்சவம்
அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை
கூட்டுறவு வார விழா: 377 பேருக்கு ரூ. 3.88 கோடி கடன் உதவி: சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்குப் பாராட்டு