புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

பாரதியார் நினைவு தினம்

DIN | Published: 12th September 2018 01:30 AM

உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகம் எண் 2இல் பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நூலகர் வீ.கணேசன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் வி.கே.சிவகுமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, பாரதியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. 
இதையடுத்து, மாணவ, மாணவிகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 

More from the section

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக காரணமல்ல
பல்வேறு அமைப்புகளின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா
வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. மனு
பல்லடத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
அவிநாசி அருகே  இரு தரப்பினரிடையே மோதல்