18 நவம்பர் 2018

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: காங்கயம் ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

DIN | Published: 12th September 2018 01:31 AM

திருப்பூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் காங்கயம், ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையால் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், காங்கயம் ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி மாணவர்கள் குழுப் போட்டிகளில்,  கூடைப்பந்துப் போட்டியில் 17 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் முதலிடமும், 14 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் 2ஆம் இடமும் பெற்றனர்.
மேலும், 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.  
இப்போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலமகா கூடைப்பந்துப் போட்டியில் 17 வயது மாணவிகள் பிரிவில் மண்டல அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களுக்குப் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் க.மணிவேல், தி.சதீஷ் ஆகியோரையும் பள்ளியின் அறக்கட்டனை அறங்காவலர் குழு உறுப்பினர் விசாலாட்சி வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வர் மு.ப.பழனிவேலு, ஆசிரியர்கள் பாராட்டினர்.

More from the section

நவம்பர் 19 மின்தடை: ஓலப்பாளையம்
சேதமான சாலைகளால் அவதியுறும் பொதுமக்கள்
கார் - இருசக்கர வாகனம் மோதல்: இரு இளைஞர்கள் சாவு
காங்கயத்தில் 174 மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள்
முத்தூர் விற்பனைக் கூடத்துக்கு  தேங்காய் வரத்து குறைந்தது