சனிக்கிழமை 17 நவம்பர் 2018

விவேகானந்தர் நினைவுக் கருத்தரங்கம்

DIN | Published: 12th September 2018 01:28 AM

உடுமலை வட்டம், ராகல்பாவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விவேகானந்தர் நினைவுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு 125 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அறிவிப்பின்படி இந்த நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. உடுமலை அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள் கார்த்தி, மாசிலாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர். இதையொட்டி, விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் குறும்படமாகத் திரையிடப்பட்டது.  ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார்.

More from the section

கொசு பெருகக் காரணமான நூற்பாலைக்கு அபராதம்
காங்கயம் நகராட்சியில் மனை வரன்முறைப்படுத்தும் முகாம்
ஜெயந்தி பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
திருப்பூரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்