திருப்பூர்

முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டாம்:  கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தல்

DIN

மக்கள் நீதி மய்யப் பொறுப்பாளர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டாம் என கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை மதியம்  நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மேலும் பேசியதாவது:
நீங்கள் அரசியலில் முழு நேரமாக ஈடுபட வேண்டியதுதானே; ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்கள் என என்னிடம் கேட்கிறார்கள். அவரவருக்குத் தொழில் வேண்டும். அரசியலே தொழிலாக இருக்கக் கூடாது. அரசியல் தொழிலாக ஆனதால்தான் பல பேர் அதை வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கின்றனர். 
நமக்கு அரசியல் தொழில் அல்ல, நாட்டுக்கு நாம் செய்யப்போகும் கடமை அது. உங்களுக்கான முடிந்த நேரத்தை அரசியலுக்கு ஒதுக்குங்கள். நம் எல்லோருக்கும் கடமை இருக்கிறது. இப்போது வாக்குறுதி கொடுப்பதற்கெல்லாம் நேரமில்லை. வேலை செய்வதற்கான நேரம் வந்து விட்டது. என் வழி காந்தியின் வழி. மகாத்மா காந்தி பரமக்குடி மாதிரியான கிராமத்துக்கு 3 முறை வந்திருக்கிறார். சென்னை நகரத்துக்கு 49 முறை வந்திருக்கிறார். அப்போது ஜெட் விமானம் கிடையாது. 4 வழிச்சாலை கிடையாது. ஆனாலும் அந்த முதிய வயதிலும் ஒவ்வொரு இடமாகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதுதான் எனக்கு முன்னுதாரணம். 
 கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொண்டு கேள்விஎழுப்ப வேண்டும் என்றார்.முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பாடலாசிரியர் சிநேகன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பேசினர்.
தாராபுரத்தில்....: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியருடன் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 
அரசியலை தொழிலாக கொண்டவர்களுக்கு என்னைக் கண்டால் பயம். இதுபோல் மாணவ சமுதாயத்தினரிடம் நான் கலந்துரையாடுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். நல்ல தமிழகத்தை உருவாக்கும் பலம் இளைய சமுதாயத்தினரிடம் மட்டுமே உள்ளது. அனைவரும் இணைந்தால் நிச்சயம் நல்ல முடிவு, நன்மை கிடைக்கும் என்றார்.
தொடர்ந்து பல்லடம், திருப்பூர் சின்னாண்டிபாளையம், வீரபாண்டி, சி.டி.சி. டெப்போ, புது பேருந்து நிலையம்  ஆகிய பகுதிகளில் பேசினார். இதையடுத்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் ராஜா எம். சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் உரையாடிவிட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT