திருப்பூர்

ரூ.61 லட்சம் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

DIN


திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பூர் ஒன்றியப் பகுதியில் ரூ.61.10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
திருப்பூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈட்டிவீராம்பாளையம் ஊராட்சி எஸ்.எஸ். நகரில் இரு வீதிகளில் தலா ரூ.9 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, திருப்பூர்-குன்னத்தூர் சாலை முதல் தலப்பனகாடு வரையில் ரூ.15.10 லட்சம் மதிப்பில் தார் சாலை, திருப்பூர்-குன்னத்தூர் சாலை முதல் காலிங்கராயன்பாளையம் வரையில் ரூ. 28 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.61.10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை திருப்பூர் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தார்.
இதில் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ஆர். சாமிநாதன், ஒன்றிய ஆணையர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துரத்தினம், கூட்டுறவு சங்கத் தலைவர் நடராஜ், துணைத் தலைவர் குமார், பொறுப்பாளர்கள் சந்திரசேகர், ஐஸ்வர்ய மஹராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT