திறனாய்வுத் தேர்வு: 1,253 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத்  தேர்வை  1,253 மாணவ, மாணவியர் எழுதினர்.

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத்  தேர்வை  1,253 மாணவ, மாணவியர் எழுதினர்.
தமிழக அரசின் தேர்வுகள் இயக்கம் சார்பில் ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும்  மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தத் தேர்வை எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதிலும் இருந்து 1,571 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காங்கயம் அரசு உயர்நிலைப் பள்ளி, தாராபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்திருந்தவர்களில் 1,253 பேர் மட்டும் தேர்வு எழுத வந்திருந்தனர்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர், மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ.1000 படிப்பு உதவித் தொகையாக வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com