"அவிநாசி பேரூராட்சியில் குடிநீர்க் கட்டணம்,  சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'

அவிநாசி பேரூராட்சியில்  குடிநீர்க் கட்டணம், சொத்து வரி உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்

அவிநாசி பேரூராட்சியில்  குடிநீர்க் கட்டணம், சொத்து வரி உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 இது குறித்து அதன் மாநிலத் தலைவர் அ.சாமிநாதன் கூறியதாவது:
  அவிநாசி பேரூராட்சி எல்லைக்குள் இருக்கும் சொந்தக் குடியிருப்புகள், வாடகைக் குடியிருப்புகளுக்குச் சொத்து வரி 50%, வணிகக் கட்டடம்,  தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு சொத்து வரி 100%,  குடியிருப்புகளுக்கான குடிநீர்க் கட்டணம் சுமார் 3 மடங்காக ரூ. 150 ஆக உயர்த்தி அமல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. குடிநீர் விநியோகம் சீராகும் வரைக் கட்டண உயர்வை தற்போதைக்கு கைவிட வேண்டும். சொத்து வரியை அனைத்துக் கட்டடங்களுக்கும் பொதுவாக ஒரே அளவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை 10% அளவுக்கு உயர்த்தலாம். இதை  பேரூராட்சி நிர்வாகம் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com