திருப்பூர்

உடுமலை நாராயணகவி பிறந்த நாள் விழா

DIN

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடுமலை நாராயணகவியின் 120-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா அரசு விழாவாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
உடுமலை அருகே உள்ள பூளவாடி என்ற கிராமத்தில் 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிறந்தவர் நாராயணகவி. நாடகம் மற்றும் திரைப்படத் துறையில் முத்திரை பதித்தவர். பகுத்தறிவு பகலவர் என அழைக்கப்பட்ட இவர், எழுதிய பாடல்கள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுச்சியை உருவாக்கின. 
இந்நிலையில், இந்த ஆண்டுமுதல் உடுமலை நாராயணகவியின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்  என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. 
இதன்படி, உடுமலை நாராயணகவியின் 120ஆவது பிறந்த நாள் விழா அரசு விழாவாக உடுமலையில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, உடுமலை குட்டைத் திடலில் உள்ள உடுமலை நாராயணகவி மணி மண்டபத்தில் விழா நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நாராயணகவி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மணி மண்டபத்தை பார்வையிட்டார். 
அப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடுமலை நாராயணகவி பிறந்த ஊரான பூளவாடியில் மணி மண்டபம் கட்டவும், உடுமலை நகரில் அவரது பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். 
இதில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டப் பேரவை உறுப்பினர் உ.தனியரசு, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன், வட்டாட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
தமுஎகச சார்பில்:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் உடுமலை நாராயணகவி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் கி.கனகராஜ்,  ராஜா, கவிஞர் துரையரசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT