வால் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி

பல்லடம் மகாலட்சுமி நகரில் வால் இல்லாமல் கன்றுக்குட்டி திங்கள்கிழமை பிறந்துள்ளது.  

பல்லடம் மகாலட்சுமி நகரில் வால் இல்லாமல் கன்றுக்குட்டி திங்கள்கிழமை பிறந்துள்ளது.  
பல்லடம் மகாலட்சுமி நகரில் மணி, நூருது தம்பதியினர் 5ஆண்டு கறவை மாட்டை வளர்த்து வந்தனர். அந்த மாடு திங்கள்கிழமை வால் இல்லாமல் கன்றுக்குட்டி ஈன்றது. இதுபற்றி கால்நடை மருத்துவர் நடராஜன் கூறுகையில்,  வால் இல்லாமல் கன்றுக்குட்டி பிறப்பது மிக அரிதாகும். இதுபோல் கன்றுக்குட்டி பிறக்க காரணம் மரபணு குறைபாடுதான். வால் இல்லாததால் ஈக்கள், கொசுக்களை விரட்ட முடியாததுதான் குறையாக இருக்கும். மற்றபடி மற்ற கன்றுக்குட்டியை போல் அதன் செயல்பாடு இருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com