பட்டா கேட்டு ஆட்சியரிடம் நரிக்குறவர் இன மக்கள் மனு

திருப்பூர் அறிவொளி நகர் பகுதியில் வீட்டுமனைப்  பட்டா கேட்டு நரிக்குறவர்கள் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 

திருப்பூர் அறிவொளி நகர் பகுதியில் வீட்டுமனைப்  பட்டா கேட்டு நரிக்குறவர்கள் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 அப்போது, திருப்பூர் மாவட்டம் அறிவொளிநகரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் அளித்து மனுவில் கூறியுள்ளதாவது: 
 திருப்பூர் மாவட்டம் அறிவொளி நகர் பகுதிகளில் அரசு வழங்கிய இடத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. நாங்கள் அனைவரும் ஊசி, பாசி விற்பனை செய்தும், கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். மேலும், எங்களுக்கு குடிநீர், கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகள் இல்லை.
 இதனால் இரவு நேரங்களில் பல்வேறு இடையூறுகளுக்கும் ஆளாகி வருவதால் நாங்கள் வசித்து வரும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
 வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தக்கோரி மனு...:  தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஆகவே, குளறுபடிகளைத் தடுக்கும் வகையில் வருகிற மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநகரத் தலைவர் செஞ்சோலை சேகர் தலைமையில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மனு...:  திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 60 க்கு உள்பட்ட எஸ்.ஆர்.நகர் வடக்குப் பகுதியில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஸ்ரீரத்தினசாமி நகரி வீட்டுமனைகள் அங்கீகாரம் பெற்று 37 ஆண்டுகள் ஆன நிலையில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
 மேலும், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் கேபில் பதிப்பதற்காக சாலைகளைத் தோண்டி சேதப்படுத்தியுள்ளதால் மழைக் காலங்களில் இப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளதால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 சாக்கடை வசதி இல்லாததால் மழைக் காலங்களில் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, எஸ்.ஆர்.நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி எஸ்.ஆர்.நகர் வடக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர். 
சாய ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன நெடியால் சுகாதார சீர்கேடு...:   எஸ்.ஆர்.நகர் வடக்குப் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையோறம் தனியார் சாய ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வரும் ரசாயன நெடி(வாசம்) குடியிருப்புவாசிகள் பலரும் நுரையீரல் தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து சாய ஆலை நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சுகாதாரா சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும். மேலும் எஸ்.ஆர்.நகரில் கட்டுமுடிக்கப்பட்ட பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com