திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். 
 கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
 இந்த ஆண்டு தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 13 ஆம் தேதி துவங்கியது. இதைத் தொடர்ந்து, தினந்தோறும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, முக்கிய நிகழ்வாக விநாயகர், திருமுருகநாதர், வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
 பின்னர் மாலை 3 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதில் திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியம் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் ரத வீதிகள் வழியாக வந்து மாலை 5 மணிக்கு தேர்நிலையை அடைந்தது.
 இதையடுத்து மாலை 5.30 மணிக்கு சண்முகநாதர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, மேற்கு ரத வீதியில் நிறுத்திவைக்கப்பட்டது. புதன்கிழமை மாலை 3 மணிக்கு மீண்டும் சண்முகநாதர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன.
 பிப்ரவரி 21 ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனம், சிம்ம வாகனக் காட்சிகளும், தெப்பத்தேர் இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22 ஆம் தேதி இரவு 7 மணிக்கு, ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 23 ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 24 ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழாவும், இரவு மயில் வாகனக் காட்சி ஆகியவற்றுடன் தேர்த் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com