பாஜக, அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்

மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கப்பற்படை புரட்சியின் 73 வது ஆண்டு நினைவு தின சிறப்புக் கருத்தரங்கம் கருப்பராயன் கோயில் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
 ஐந்தாண்டு கால மோடி ஆட்சி எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. விரைவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாரம்பரிய தளமான வடக்கில் பாஜகவுக்கு வாய்ப்பு  இல்லை. எனவே, தென் மாநிலங்களைக் குறி வைத்து வருகிறார்கள்.
ஆந்திராவில் பாஜகவிக்கு கூட்டணி வாய்ப்பு இல்லை. தெலங்கானாவிலும் அவர்களுக்கு வேட்பாளர்கள் கிடையாது. கர்நாடகாவில் பாஜக அரங்கேற்றிய நாடகம் பலிக்கவில்லை. கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் ஆதாயம் கிடைக்கும் என்று பாஜகவும், காங்கிரஸும் எடுத்த சந்தர்ப்பவாத அரசியளை மக்கள் ஏற்கவில்லை. 
இந்தியாவில் பல பகுதிகளில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கும்போது, இங்கே தமிழகத்தில் அதிமுகவுடம் பாஜக கூட்டணி சேர்ந்திருக்கிறது. 
 இந்தக் கூட்டணியை முறியடிக்க வேண்டிய அரசியல் கடமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணியை முறியடிப்போம் என்றார்.
 இந்நிகழ்ச்சியில்,  மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com