சத்தியமங்கலத்தில் சாலையில் பஞ்சு பேலுடன் தீயில் கருகிய லாரி

புன்செய் புளியம்பட்டி அருகே மின்கம்பியில் உரசியதால் பஞ்சு பேலுடன் லாரியும் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருதி சாம்பலாயின. 


புன்செய் புளியம்பட்டி அருகே மின்கம்பியில் உரசியதால் பஞ்சு பேலுடன் லாரியும் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருதி சாம்பலாயின. 
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் 20 க்கும் மேற்பட்ட தனியார் நூல் மில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மில்களுக்கு தேவையான பஞ்சு வெளி மாநிலங்களில் இருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு லாரியில் 20 டன் கொண்ட 100 க்கும் மேற்பட்ட பஞ்சு பேல்கள் ஏற்றி கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் இருந்து புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் நூல் மில்லுக்கு தேவையான பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை மேட்டூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்பவர் ஓட்டி வந்தார்.
லாரியில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பாரம் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிக உயரம் காரணமாக புன்செய் புளியம்பட்டி காவல் நிலையம் அருகே லாரி வந்தபோது அங்கு சாலையின் குறுக்கே சென்ற மின்வயரை அறுத்துவிட்டு சென்றதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து போலீஸார் லாரி ஓட்டுநரிடம் அபராதம் வசூலித்தனர். அதன் பிறகு லாரி விடுவித்தனர். இதையடுத்து, அங்கு இருந்து புறப்பட்ட லாரி டாணாபுதூரை அடுத்த ஜே.ஜே.நகர் அருகே சென்று கொண்டு இருந்தது.
அப்போது, லாரியில் அதிக உயரத்திற்கு பஞ்சு பேல்கள் ஏற்றப்பட்டு இருந்ததால், தாழ்வாக இருந்த மின் கம்பிகள் மீது உரசி உள்ளது. 
இதன் காரணமாக பஞ்சு பேலில் தீப் பிடித்து வேகமாக பரவி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பஞ்சுடன் சேர்ந்து லாரியும் தீப்பிடித்தது.
சுமார் 3 மணி நேரத்தில் லாரி மற்றும் பஞ்சு பேல்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின. 
இது குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com