உடுமலை ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா: 25 ஆயிரம் பேர் பங்கேற்பு

உடுமலை அருகே சோமவாரபட்டி கிராமத்தில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் வியாழக்கிழமை

உடுமலை அருகே சோமவாரபட்டி கிராமத்தில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோமவாரபட்டியில் அமைந்துள்ளது இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆல்கொண்டமால் கோயில். இந்த கோயிலில்  ஆண்டுதோறும் பொங்கல் விழா மூன்று நாள்கள் வெகு விமரிசையாக கொண்டா டப்படும். இந்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18 ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற்றது.
கால்நடைகளைக் காக்கும் தெய்வமாக கருதும் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடை களின் பாலினால் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது  ஆண்டாண்டு  காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை,  பாலாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வியாழக்கிழமை அதிகாலை முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினர். ஏராளமானோர் மாட்டு வண்டிகளில் கோயிலுக்கு வந்திருந்தனர். குடும்பத்துடன் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மண் உருவத்தாலான கால்நடை உருவ பொம்மைகளை வைத்தும், தீப வழிபாடு செய்தும், பால் அபிஷேகம் செய்தும் ஆல்கொண்டமாலை வழிபட்டனர். 
விவசாயிகள், பொதுமக்கள் பலர் கன்று குட்டிகளை தானம் செய்தனர்.  விழாவையொட்டி பொதுமக்களுக்காக ராட்டினம், சர்க்கஸ், என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகளும், சாலையின் இருமருங்கிலும் நூற்றுக்கணக்கான கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் உடுமலை, பல்லடம், திருப்பூர், பழனி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 
விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com