திருப்பூரில் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாடு

திருப்பூரில் வங்கி ஊழியர்கள் சங்க 2 ஆவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

திருப்பூரில் வங்கி ஊழியர்கள் சங்க 2 ஆவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 மத்திய அரசின் போக்கு தனித் துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைப்பது என்பது தான். அதனுடைய ஒரு பகுதியாகத்தான் பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய பொதுத் துறை வங்கிகளை இணைக்க வேண்டும் என முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது நடைபெற்றால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி காணாமல் போய்விடும். 
 இதனால், வங்கி சேவை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வங்கியில் இருக்கக்கூடிய ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவர். மேலும், ஏற்கனவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவோடு அதன் அசோசியேட் வங்கிகள் இணைக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்பட்டன. இதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். 
 இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாள்கள் வேலை நிறுத்தம் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட உள்ளது. எனவே, ஆட்சியாளர்கள் நாட்டுக்கு விரோதமான பொருளாதரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டுக்குப் பலன் தரக்கூடிய கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  
மாநாட்டில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க துணை செயலாளர் சீனிவாசன், ஏஐடியுசி மாநில தலைவர் சுப்பராயன் மற்றும் வங்கி ஊழியர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com