தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரியில் பாரதியார் பிறந்த நாள் விழா

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அக்ராஹரம் நடுநிலைப்பள்ளி மற்றும் பரிகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
அக்ராஹரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு,  பள்ளித் தலைமை ஆசிரியர் அருள்நாதன் தலைமை வகித்து,  பாரதியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதனைத் தொடர்ந்து,  பாரதியாரின் பாடல்கள் பாடப்பட்டன. மேலும்,  மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கவிதை மற்றும் பாடல் வாசிப்பு உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  இப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவில், ஆசிரியைகள் கீதா, உமா, உமாராணி மற்றும் மாணவ,  மாணவியர் கலந்து கொண்டனர்.
பரிகம் பள்ளி: இதேபோல, அதியமான்கோட்டை அடுத்துள்ள பரிகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தகடூர் கலைஞர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பாரதி விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை  (பொ) கு.குணசங்கீதா தலைமை வகித்தார். 
இதில், மாணவ,  மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ப.சண்முகம்,  செயலர் ஆ.ஜெய்சங்கர், தகடூர் கலைஞர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் சிலம்பரசன், என்.விஜயராகவன், பொருளாளர் வி.அழகுபூபதி,  நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
அரூரில்...
அரூரில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில்,  அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் மகாகவி பாரதியாரின் திருவுருவப் படத்துக்கு இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் கி.ஜானகி ராமன், கவிஞர்கள் ரவீந்திரபாரதி, ஆதி சௌந்திரராஜன்,  மு.பிரேம்குமார், ஆசிரியர் சின்னக்கண்ணன், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சண்முகம்,  ஜெயசீலன்,  அன்னை முருகேசன்,  வழக்குரைஞர் சி.முருகன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழத் துறையின் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழாவானது பேச்சரங்கமாக, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் தமிழத் துறை இலக்கியச் சோலையின் சார்பில் பாரதியார் பிறந்த நாள் தின விழா கொண்டாடப்பட்டது. தமிழத் துறைத் தலைவர் சௌ.கீதா தலைமையில் நடைபெற்றது. பன்முகப் பார்வையில் பாரதியார் என்கிற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது.
பெண்கள், சமூகம்,  விடுதலை, உணர்வு, மொழிப்பற்று, பாரதியார் பெருமைகள், வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட தலைப்பில் புஷ்பலதா, புஷ்பா, உஷாராணி, அலமேலு, ஆனந்தஷைனி, கலைவாணி ஆகியோர் பேசினர். 
சிறப்பு விருந்தினராக பாரதி ரமேஷ் சிறப்புரையாற்றினார்.  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்த் துறை உதவி பேராசிரியர் சிவகாமி மற்றும் பேராசிரியர்கள், பேரவை உறுப்பினர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையை அடுத்த ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் பிறந்த நாள்  விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னதாக, காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் உருவப்படத்துக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பள்ளித் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் தலைமை வகித்தார்.  அனைவரும் பாரதியாரின் எண்ணங்களைச் செயல்படுத்திட முன்வர  வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார், 
பிறகு மாணவர்கள் பாரதியார் பிறந்தநாள் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்,  போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவில், உதவி ஆசிரியர்கள் மு. லட்சுமி, அ. பவித்ரா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT