பாரம்பரிய மரம் வளர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி

தருமபுரி மாவட்டம்,  நல்லம்பள்ளி வட்டத்துக்கள்பட்ட தொப்பூர் கட்டமேடு வன அலுவலகத்தில், வேளாண் துறை

தருமபுரி மாவட்டம்,  நல்லம்பள்ளி வட்டத்துக்கள்பட்ட தொப்பூர் கட்டமேடு வன அலுவலகத்தில், வேளாண் துறை சார்பில், செவ்வாய்க்கிழமை பாரம்பரிய மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
வேளாண் அலுவலர் இளங்கோ பயிற்சியைத் துவக்கி வைத்து வேளாண்மை திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.  வனச் சரகர் பூமலை,  பாரம்பரிய மரம் வளர்ப்பு குறித்தும் மற்றும் மானியத் திட்டங்கள், மரங்களின் முக்கியத்துவத்தையும், நீரின் பயன்பாட்டை ப்பொருத்து எந்த மரம் வளர்க்கலாம் என்பது குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் மாதேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ்செல்வி, அட்மா திட்டப் பணியாளர் அருண்குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com