தருமபுரி

மாற்றுத் திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

DIN

மாற்றுத் திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம்,  பாலக்கோடு அருகே பெல்லுஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச இயலாத 23 வயதான மாற்றுத் திறனாளி பெண்ணை, கடந்த 2015 நவம்பர் 18-ஆம் தேதி திருமல்வாடி அருகேயுள்ள கீழ்சீங்காடு பகுதியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் குமார்(30) என்பவர் பலாத்காரம் செய்தார்.  இது குறித்து, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து,  குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, தொடர்பான விசாரணை,  தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இவ் வழக்கில்,  அரசு தரப்பில் வழக்குரைஞர் உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த நிலையில்,  செவ்வாய்க்கிழமை இவ் வழக்கு மீண்டும் நீதிபதி(பொ) எம்.ஜீவானந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இவ் வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால்,  மாற்றுத் திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த, குமாருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், இழப்பீடு வழங்கத் தவறினால், அவருடைய அசையும் மற்றும் அசைய சொத்துகளை பறிமுதல் செய்யலாம் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT