தருமபுரி

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN


தருமபுரி நகரம் மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்துப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை அகற்றினர்.
தருமபுரி நகர், புறநகர் பேருந்து நிலையத்தில், நடைபாதை மற்றும் பேருந்து நிற்கும் இடங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், அனுமதியின்றி நிறுத்தப்படும், இருசக்கர வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து புகார்கள் மாவட்டக் காவல் துறைக்கு வந்தன.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து பாதிப்புகளை தடுக்கும் வகையில், இரண்டு பேருந்து நிலையத்திலும், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள், அங்கிருந்த பொருள்களை போலீஸார் அகற்றினர்.
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 60 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், போலீஸார் கருணாநிதி உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT