அரூரில் தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க.வினருடன் அமைச்சர் ஆலோசனை

அரூரில் இடைத் தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை ஆலோசனை


அரூரில் இடைத் தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், அரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல், 2019 -இல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் பணிகளில் அதிமுக நிர்வாகிகள் எவ்வித தொய்வும் இல்லாமல் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதனை மறந்து ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் முகவர்களை தேர்வு செய்து, வாக்காளர் பெயர் பட்டியல்களை சரிபார்க்க வேண்டும். தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க கட்சி நிர்வாகிகள் முயற்சிக்க வேண்டும்.
அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரூர் நகரில் கழிவு நீர் கால்வாய் சேதம் இருந்தால் சீரமைப்பு செய்யப்படும். அதேபோல், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. எச்.ஜி ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலர் செண்பகம் சந்தோஷ், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.காவேரி, மாவட்ட பிரதிநிதி கீரை எஸ்.சம்பத், கூட்டுறவு வீட்டு வசதி சங்க முன்னாள் தலைவர் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com