மழை, பலத்த காற்று வீசும் போது  வெளியில் நடமாட வேண்டாம்: ஆட்சியர்

மழை மற்றும் பலத்த காற்று வீசும்போது, பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று  மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அறிவுறுத்தியுள்ளார்.

மழை மற்றும் பலத்த காற்று வீசும்போது, பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று  மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அறிவுறுத்தியுள்ளார்.
புயல் பாதிப்பு தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்  ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் சு.மலர்விழி பேசியது: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, நவ.14-ஆம் தேதி பிற்பகல் முதல் மழையும்,  நவ.15-ஆம் தேதி பலத்தக் காற்றும் வீசுக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மழை மற்றும் காற்று பாதிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இயற்கை இடர்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடி தகவல் அளிக்கும் பொருட்டு, 252 ஊராட்சிகளிலும் தகவல் அளிப்பவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மரங்கள், மின்கம்பங்கள் கீழே விழுந்தால்  அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள், போதிய  இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து தடைபடும்போது, மாற்று வழியில் போக்குவரத்தைத் திருப்பி விடவேண்டும். அதேபோல, பொதுமக்களும், மழை மற்றும் பலத்தக் காற்று வீசும்போது வெளியில் நடமாட வேண்டாம். அதேபோல இடி மற்றும் மின்னல் ஏற்படும் வேளைகளில் தங்களது கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும். மேலும், இடர்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com