தருமபுரி

சிட்லிங் மாணவி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு, ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டச் செயலர் கே.பழனிசாமி தலைமை வகித்தார்.
சிட்லிங்கில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மலைவாழ் பழங்குடியின பிளஸ் 2 மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 2 ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பள்ளி மாணவியின் புகார் மனுவை பெறாமல் அலைக்கழித்த கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மீது பிரிவு 304 -இன் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்ய வேண்டும். மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்த அரசு மருத்துவர்கள், மகளிர் காப்பக ஊழியர்கள் மீது பிரிவு 166-ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பி.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாவட்டச் செயலர் ஏ.குமார், ஒன்றியச் செயலர்கள் ஆர்.மல்லிகா, கே.தங்கராஜ், சி.வஞ்சி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட துணைச் செயலர் ஏ.கண்ணகி உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT