தருமபுரி

மருத்துவக் கல்லூரி முன் போக்குவரத்து சமிக்ஞை அமைக்க வலியுறுத்தல்

DIN

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் விபத்துக்களைத் தவிர்க்க, போக்குவரத்து சமிக்ஞை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி நகரிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு எதிரே உள்ள நெடுஞ்சாலையில் எஸ்.வி. சாலை இணைகிறது. இச்சாலையில் ஏராளமான தனியார் பள்ளிகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள சந்திப்பு சாலை வழியாக எஸ்.வி.சாலைக்கு செல்கிறது. இவைத் தவிர, இச்சாலையில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், மற்றும் நோயாளிகளை அழைத்து வரும் ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் வாகனங்கள், எஸ்வி சாலைக்கு திரும்பும் வாகனங்கள், நகருக்குள் செல்லும் வாகனங்கள் என எப்போதும் இச்சாலையில் வாகன போக்குவரத்து நிரம்பி வழியும்.
 குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் அதிகளவு காணப்படும். இருப்பினும், மருத்துவக் கல்லூரிக்கு எதிரே இதுவரை போக்குவரத்து சமிக்ஞையோ அல்லது போக்குவரத்துக் காவலரோ நியமிக்கப்பட வில்லை. இதனால், வாகனங்கள் மருத்துவமனைக்கு திரும்பிச் செல்லவும், நகருக்குள் வரவும், எஸ்வி சாலைக்கு திரும்பிச் செல்வதிலும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. மேலும், அவ்வப்போது விபத்துக்கள் நிகழ்கின்றன.
இந்த நிலையில், சனிக்கிழமை மருத்துவக் கல்லூரிக்கு எதிரே பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த சரக்கு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளிப்  பேருந்தின் மீது மோதாமலிருக்க, லாரியை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச்சுவர் மீது ஓட்டுநர் இடித்து நிறுத்தினார். இதனால், பள்ளிப் பேருந்து விபத்திலிருந்து தப்பியது.
எனவே, வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்து நிகழாமல் தவிர்க்கவும், அரசு மருத்துவக் கல்லூரிக்கு எதிரே சமிக்ஞை அமைத்து போக்குவரத்துக் காவலர்களை நியமித்து வாகன போக்குவரத்தை சீர்செய்ய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கைகயாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT