தருமபுரி

தூய்மை பள்ளிகளுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை அளிப்பு

DIN

தருமபுரியில்  40 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளிகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 345 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, கூட்டத்தில், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்து நிவாரணமாக   சகுந்தலா, ராஜாமணி ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்துக்கான காசோலை, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 8 நபருக்கு தலா ரூ.28,584 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள்,  5 நபருக்கு ரூ.25,090 மதிப்பிலான சலவைப் பெட்டிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் 35 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்,  ஒரு அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் 4 தனியார் பள்ளிகள் என மொத்தம் 40 பள்ளிகளுக்கு ரூ.2.30 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள், விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற 9 பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை ஆட்சியர் சு.மலர்விழி வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமிர் பாஷா, முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT