பாலக்கோட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாலக்கோடு பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இச்சட்டம் அமலுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து பாலக்கோடு பேரூராட்சியில் இது குறித்து பொதுமக்களுக்கும் ,வர்த்தகர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரூராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பேரூராட்சிப் பகுதிக்குள்பட்ட வர்த்தகக் கடைகள், தள்ளுவண்டி கடைகள், உணவகங்கள், காய்கறி கடைகளில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப், உறிஞ்சு குழல்கள், தெர்மாகோல் கப்புகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றனவா? என அனைத்துக் கடைகளிலும் பரிசோதனை   செய்தனர். சில கடைகளிலிருந்து பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன .
அத்துடன் பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக துணிப் பைகள், காகிதப் பைகள், வாழை இலை, முறுக்கன்இலை, பாக்கு மட்டைகள், கப்புகள், கண்ணாடி, சில்வர் கப்புகள்  போன்றவற்றை பயன்படுத்துமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இந் நடவடிக்கையில்  செயல் அலுவலர் பி. ஜலேந்திரன், இளநிலை உதவியாளர் சின்னசாமி, வரி வசூலர் மாணிக்கம், மேற்பார்வையாளர் நாகராஜன், கிருஷ்ணன் மற்றும்  துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com