வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

உலகத் தமிழ்க் கழகம் சார்பாக கவிதாஞ்சலி

DIN | Published: 11th September 2018 09:28 AM

பாலக்கோடு  உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் அலுவலக கட்டடத்தில் கவிஞர்கள் கவிதைகள் வாசித்து கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில் கவிஞர்கள், கருணாநிதியின் தமிழாற்றல், இலக்கியம்,தியாகம் குறித்து கவிதைகளை வாசித்தனர். கவிஞர்கள் கதிர்பாரதி, அரங்கநாயகி, செயபிரகாசம்,  தகடூர் ராமமூர்த்தி, வ.செ.குணா, முருகேசன், பட்டிமன்ற பேச்சாளர் இளந்தென்றல் சரவணன், இரா.வெ.அரங்கநாதன், புலவர் ராமசாமி, கோ.வெங்கடாசலம் என பலரும் கவிதைகள் மூலம் அஞ்சலி செலுத்தினர்.
இதில் கல்லூரி மாணவர்கள், பெண்கள், திமுகவினர்  கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை உலகத் தமிழ்க் கழகத்தின் செயலாளர் எஸ்.குணசேகரன், கோ.வெங்கடாசலம்,ராமசாமி,முருகேசன்,பாலன் சீதாலட்சுமி ஆகியோர்  செய்திருந்தனர்.

More from the section

பொம்மிடி ரயில் நிலையத்தில் தூய்மைப் பணிகள்
ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் குடமுழுக்கு
நூல் அறிமுக விழா
பாலக்கோட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
வரத்துக் குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு