வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

நக்சல் சுவரொட்டிகளை ஒட்டியதாக 4 பேர் கைது

DIN | Published: 11th September 2018 09:28 AM

தருமபுரி நகரில் நக்சல் ஆதரவு சுவரொட்டிகளை ஒட்டியதாக 4 பேர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
தருமபுரி நாயக்கன்கொட்டாயில் நக்சல்பாரி இயக்கத் தலைவர்களான பாலன், எல். அப்பு ஆகியோருக்கு நினைவிடம்
அமைக்கப்பட்டுள்ளது.
வரும் செப். 12ஆம் தேதி பாலன் நினைவு நாளையொட்டி ஆண்டுதோறும் இந்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதேபோல நிகழாண்டிலும் எல். அப்பு, பாலன் சிலைப் பாதுகாப்பு மற்றும் நில மீட்புக் கூட்டமைப்பு என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கோரி காவல்துறையில் கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், இதுதொடர்பான சுவரொட்டியை நகரப் பகுதியில் அந்த அமைப்பினர் ஒட்டிக் கொண்டிருந்தனர். நகர காவல்துறையினர் இதுதொடர்பாக சிபிஐ (எம்எல்) அமைப்பைச் சேர்ந்த சித்தானந்தம்,  தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மாலெமா) ரமணி மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், வேடியப்பன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More from the section

பள்ளி மாணவர்களுக்கு கேரம் விளையாட்டுப் போட்டி
உலக வன உயிரின வார விழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
வேலைவாய்ப்பு முகாம்: 145 பேருக்கு பணி நியமன ஆணை
பள்ளியில் உணவுத் திருவிழா
சத்துணவு ஊழியர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்