புதன்கிழமை 14 நவம்பர் 2018

நரிப்பள்ளியில் 7 பவுன் நகை திருட்டு

DIN | Published: 11th September 2018 09:27 AM

அரூரை அடுத்த நரிப்பள்ளியில் 7 பவுன் நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
அரூர் வட்டம், நரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி ராணி (55). இவர், அந்த ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து
வருகிறார். 
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு யாரும் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சங்கிலிலி, மோதிரம் உள்ளிட்ட  7 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராணி அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.

More from the section

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்: சமூக ஆர்வலர் நந்தினி கைது
பாலியல் வன்கொடுமையால்  உயிரிழந்த  சிறுமி குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி
கந்தசஷ்டி பெருவிழா: சூரனை வதம் செய்தார் சுப்பிரமணியர்
மழை, பலத்த காற்று வீசும் போது  வெளியில் நடமாட வேண்டாம்: ஆட்சியர்
கடந்த ஆண்டில் 180 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: "சைல்டுலைன்' அமைப்பினர் தகவல்