திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

DIN | Published: 12th September 2018 08:08 AM

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி செவ்வாய்க்கிழமை பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
தருமபுரி அரசுக் கல்லூரி வளாகத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.  போட்டிகளில் வென்றோர் விவரம் (முறையே முதல் மூன்று பரிசு பெற்றோர்)
கவிதை - தருமபுரி அரசுக் கல்லூரி மாணவர் இரா. சிவலிங்கம், தொன்போஸ்கோ கல்லூரி மாணவர் க. ரமேஷ்,  லட்சுமி நாராயணா மகளிர் கல்லூரி மாணவி வெ. சற்குணா.
கட்டுரை - தருமபுரி அரசுக் கல்லூரி மாணவி ர. வேதஸ்ரீ,  விஜய் வித்யாலயா கல்வியியல் கல்லூரி மாணவி தே. தீபா,  காரிமங்கலம் அரசுக் கல்லூரி மாணவி மு. கலைச்செல்வி.
பேச்சு - தருமபுரி அரசுக் கல்லூரி மாணவர் ச. கெளதம், பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய மாணவர் மு. சந்தோஷ்குமார், காமதேனு கல்லூரி மாணவர் மு. வசந்த். 
போட்டியில் முதலிடம் பிடித்தோருக்கு ரூ. 10 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்தோருக்கு ரூ. 7 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்தோருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 
கவிதைப் போட்டிக்கு கோ. மலர்வண்ணன், இரா. சங்கர், ம. லோகநாதன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். கட்டுரைப் போட்டிக்கு ம. பரமசிவம், சி. கணேசன், கு. சிவப்பிரகாசம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.  பேச்சுப் போட்டிக்கு மா. பரமசிவம், அ. கெளரன், மு. செந்தில்குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
முதல் பரிசு பெற்றோர் சென்னையில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டியில் பங்கேற்க அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர்.
 

More from the section

தொல்லியல் செய்தி மடல் வெளியீடு
சிட்லிங் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
அரூர் அருகே பல்நோக்கு கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
சிட்லிங் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தல்