புதன்கிழமை 14 நவம்பர் 2018

கொங்கு கல்லூரியில் கருத்தரங்கம்

DIN | Published: 12th September 2018 08:06 AM

மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் டி.சந்திரசேகர் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பத்தால் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, கணினி பயன்பாடு, கணினியின் ஆராய்ச்சி படிப்புகள் குறித்து பேராசிரியர்கள் ஆர்.எஸ்.சோமசுந்தரம், பி.சுகந்தி ஆகியோர் பேசினர். இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 300 - க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 60-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதில், கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலர் அ.மோகன்ராசு, பொருளாளர் பி.வரதராஜன், தாளாளர்கள் செ.தீர்த்தகிரி,  கே.இளங்கோ, கல்லூரி முதல்வர் நா.குணசேகரன், துணை முதல்வர் க.சீனிவாசன், பேராசிரியர் எஸ்.தணிகாசலம், உதவிப் பேராசிரியர் ஆர்.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section

தருமபுரியில் நாளை கூட்டுறவு வார விழா தொடக்கம்
ஒகேனக்கல்லில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்க எதிர்ப்பு
பாப்பிரெட்டிபட்டி போராட்ட தேதி மாற்றம்: டிடிவி தினகரன்
அரூரில் தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க.வினருடன் அமைச்சர் ஆலோசனை
உடற்கூராய்வுக்குப் பிறகு சிட்−ங் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு