சனிக்கிழமை 22 செப்டம்பர் 2018

தற்காலிக பட்டாசு கடைகளுக்கான விதிமுறைகள்

DIN | Published: 12th September 2018 07:56 AM

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வைக்கப்படவுள்ள தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கான விதிமுறைகளைப் பின்பற்றி கடைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், 2008 ஆம் ஆண்டின் வெடிபொருள் விதிகளின்படி விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டாசுக் கடை வைக்கும் கட்டடம் கல் மற்றும் தார்ச்சுக் கட்டடமாக இருக்க வேண்டும். கடையின் இருபுறமும் வழி அமைக்க வேண்டும். மின்சார விளக்குகள் மட்டும் கடையில் பயன்படுத்த வேண்டும்.
தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் காவல்துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வணிக வரி அலுவலகத்தில் டின் நம்பர் பெறப்பட்ட சான்றினை இணைக்க  வேண்டும்.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டட வரைபடம் இருபிரதிகள் இணைக்க வேண்டும்.
வாடகைக் கட்டடமாக இருந்தால் நோட்டரி வழக்குரைஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமக் கட்டணமாக ரூ. 500 செலுத்தி அதற்கான அசல் ரசீதுடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஏஇ 5 படிவத்துடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான இறுதி நாள் வரும் செப். 30. அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
 

More from the section


பொருள்கள் தட்டுப்பாடு: நியாய விலைக் கடை முற்றுகை

கொங்கு கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்
பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு விழிப்புணர்வு பயிற்சி
வேளாண் கல்லூரி மாணவியருக்கு காளான் வளர்ப்பு விவரிப்பு
1.18 லட்சம் பேருக்கு ரூ.114 கோடி மகப்பேறு நிதியுதவி