சனிக்கிழமை 15 டிசம்பர் 2018

உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்

DIN | Published: 19th September 2018 08:21 AM

உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கு  மூன்று நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி முகாமை தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொ) முத்துக்குமார் முன்னிலை வகித்து பேசினார். முகாமில் நீச்சல்,  ஸ்குவாஷ்,  ஜிம்னாஸ்டிக்ஸ்,  வாள் சண்டை, குத்துச்சண்டை,  டேக்வாண்டோ,  சதுரங்கம், சாலை சைக்கிள்,  கடற்கரை கையுந்துபந்து, கேரம், சிலம்பம், வளையப்பந்து, ஜுடோ ஆகிய புதிய விளையாட்டுக்களின் விதிமுறைகள் குறித்து வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகிற செப்.20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள முகாமில், 50 உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

More from the section

அ.ம.மு.க. தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ளது
சிறுபான்மையின பயனாளிகள் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
ஒகேனக்கல் வனப் பகுதியில் பெண் யானை சாவு
தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நுண்ணீர்ப் பாசனம் நிறுவுதல், பராமரித்தல் பயிற்சி