உலக வன உயிரின வார விழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

உலக வன உயிரின வார விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான

உலக வன உயிரின வார விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியம், விநாடி-வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் (பொ) எஸ்.எம். பிரீத்தா, உதவி வனப் பாதுகாவலர் தி. கண்ணன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் நாடு முழுவதும் அக். 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை உலக வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு "வன உயிரினங்களின் பாதுகாப்பில் மக்களின் பங்கு' என்ற தலைப்பில் இவ்விழா
கொண்டாடப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியம், விநாடி-வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 
ஓவியம்: செப். 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மாவட்ட வன அலுவலகத்தில் "வன உயிரினங்களின் பாதுகாப்பில் நமது பங்களிப்பு' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்படவுள்ளது. 
எல்கேஜி முதல் முதல்வகுப்பு வரை பிரிவு "ஏ', இரண்டாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பிரிவு "பி', ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பிரிவு "சி', 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பிரிவு "டி', கல்லூரி மாணவர்கள் பிரிவு "இ', மாற்றுத் திறனாளிகள் பிரிவு "எப்' ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். அனைத்துப் பிரிவுகளிலும் முதல் பரிசு பெறுவோர் மாநிலப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 
விநாடி-வினா: செப். 26-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1  மணி வரை மாவட்ட வன அலுவலகத்தில் "சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன உயிரினம்' என்ற தலைப்பில் விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
பேச்சுப் போட்டி: செப். 26-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மாவட்ட வன அலுவலகத்தில், "வன உயிரினங்களைப் பாதுகாத்தலின் அவசியம்' என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியே பேச்சுப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பிரிவு "ஏ', கல்லூரி மாணவர்கள் பிரிவு "பி', மாற்றுத் திறனாளிகள் பிரிவு "சி' ஆகிய பிரிவுகளில் இப்போட்டிகள் நடத்தப்படும். இதில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெறுவோர் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டிகளுக்கு அனுப்பி
வைக்கப்படுவர்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com