பெரியார் சிந்தனைகள் சிறப்புச் சொற்பொழிவு

தருமபுரி அரசுக்  கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் இரண்டாம்  ஆண்டு முதுநிலை மாணவர்களுக்காக

தருமபுரி அரசுக்  கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் இரண்டாம்  ஆண்டு முதுநிலை மாணவர்களுக்காக "பெரியாரின் சிந்தனைகள்' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சொல்லாக்கப் புலவர் நெடுமிடல் கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர் கூறியது:
எழுத்துச் சீர்திருத்தம் பெரியார் கொண்டுவந்த மிக முக்கியமான ஒன்று. தொடக்கத்தில் இதனைப் பலரும் கிண்டலடித்தனர். ஆனால், இன்று அவரது எழுத்துச் சீர்திருத்தம்தான் பயன்பாட்டில் உள்ளது.
அதேபோல, சாதி ஒழிப்பில் பெரியாரின் பங்கு மிகவும் முக்கியமானது. வடமாநிலங்களில் இன்றும் முக்கிய தலைவர்களின் பெயர்களும்கூட சாதிப் பெயரையும் சேர்த்துத்தான் காணப்படுகிறது.
 ஆனால், தமிழ்நாட்டில் பெரியாரின் மறைவுக்குப் பிறகு இன்றைக்கும் கூட சாதிப் பெயரை சேர்த்துக் கொண்டு தனது பெயரைக் குறிப்பிடுபவர்கள் மிக மிகக் குறைவு. இது சாதாரண விஷயமல்ல. சாதி ஒழிப்பை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவர் பெரியார் என்றார் நெடுமிடல். 
சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு தமிழ்த் துறைத் தலைவர் கோ. கண்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் கெளரன், சங்கர், கணேசன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பேராசிரியர் கு. சிவப்பிரகாசம் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் குப்புசாமி நன்றி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com