மாணவர்கள் தனித்திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

மாணவர்கள் தங்களது தனித்திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்களது தனித்திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம்,  பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்ப திறன் வளர்த்தல்  பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், பங்கேற்ற 150 மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும்,  பாலக்கோடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகளுக்குத் தேவையான அறிவியல் தொழில்நுட்ப திறன் வளர்த்தல் தொடர்பாக 3 நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. பயிற்சியின் முக்கிய நோக்கம் திறன் சார் பயிற்சிகள் மற்றும் ஊக்குவிக்கும் நிகழ்வுகள் மூலம் தங்கள் திறமைகளை தொழில்துறைக்கேற்றவாறு மேம்படுத்துவதும் சுயதொழில் தொடங்குவதற்குரிய திறனை அடைவதும் ஆகும். இதன் மூலம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியல் மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் தொழில் முனைவோர்களாகவும் மாறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத் திட்டம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவில் 10 மாவட்டங்களில் 3000 மாணவர்கள் பயனடையும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 91 மையங்களில் 97 லட்சம் செலவில் 28300 மாணவர்கள் பயனடையும் வகையில் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இத்திட்டமானது மேலும் 15 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான நிதி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.22.50 லட்சமாக 2018-19 ஆம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. 
எனவே, இனிவரும் காலங்களில் இறுதியாண்டு பயிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியல் மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் தொழில் முனைவோர்களாக மாறுவதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை வேலைக்குத் தயார்படுத்துவது மட்டுமல்லாது, ஆற்றல் உடையவர்களாகவும், உலக சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தனித் திறனை படைத்தவர்களாகவும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இவ்விழாவில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர் செயலர் ஆர்.சீனிவாசன், பாலக்கோடு அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் (பொ) பி.எஸ்.செண்பகராஜா, கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் தொ.மு.நாகராஜன், கல்லூரி துணை முதல்வர் ரவி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com