புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா

பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற புதூர் பொன் மாரியம்மன் கோயில் விழா, கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற புதூர் பொன் மாரியம்மன் கோயில் விழா, கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெறும் விழாவில் புதன்கிழமை பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், லாரி, டெம்போ, மினி லாரி, ஆகாய விமானத்தில் தொங்கியப்படியும், பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
மேலும் கிராம மக்கள் திரௌபதியம்மன் கோயிலிலிருந்து மா விளக்கு தட்டு மற்றும் பூஜை பொருள்கள் என பக்தர்கள் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு நடந்து சென்று புதூர் மாரியம்மன் கோயிலைச் சென்றடைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்குத் தொடர்ந்து 5 இடங்களில் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகம் 100-க்கும் மேற்பட்ட காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com