பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி

மொரப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியானது, தொகுதி சீரமைப்புக்குப் பிறகு 2011-இல் பாப்பிரெட்டிப்பட்டி

மொரப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியானது, தொகுதி சீரமைப்புக்குப் பிறகு 2011-இல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியாக மாறியது.  தற்போது முதல் முறையாக இந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு கிழக்கே அரூர் சட்டப் பேரவைத்  தொகுதியும், வடமேற்கு பகுதியில் பாலக்கோடு,  பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிகளும்,  மேற்கே  தருமபுரி தொகுதியும்,  தெற்கே சேலம் மாவட்டத்தின் ஓமலூர் மற்றும் ஏற்காடு தொகுதிகளையும் கொண்டது. 
தொகுதியில் அடங்கியுள்ள
பகுதிகள்
தருமபுரி வட்டம் : கே.நடுஹள்ளி, நல்லன்ஹள்ளி, கோணங்கிநாயக்கன் அள்ளி, வெள்ளாளப்பட்டி,  ஆண்டிஅள்ளி, கிருஷ்ணாபுரம், புழுதிகரை, கொண்டம்பட்டி, குப்பூர், பழைய தருமபுரி,  செட்டிக்கரை,  நாயக்கனஹள்ளி, மூக்கனூர், வெள்ளோலை, நூலஅள்ளி, முக்கல்நாய்க்கன்பட்டி, வத்தல்மலை,   திப்பிரெட்டிஹள்ளி, வே.முத்தம்பட்டி, கொண்டகரஹள்ளி,  குக்கல்மலைக் கிராமங்கள்.  பேரூராட்சி :  கடத்தூர்,  பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய
பேரூராட்சிகள்.


இதுவரை வென்றவர்கள்
மொரப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி
1977    என். குப்புசாமி (அதிமுக) 
1980    என்.குப்புசாமி (அதிமுக) 
1984    தீர்த்தகிரி கவுண்டர் (காங்கிரஸ்) 
1989    வ.முல்லைவேந்தன் (திமுக) 
1991    கே.சிங்காரம் (அதிமுக) 
1996    வ.முல்லைவேந்தன் (திமுக) 
2001    பி.பழனியப்பன் (அதிமுக) 
2006    வ.முல்லைவேந்தன் (திமுக) 
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி
2011    பி.பழனியப்பன் (அதிமுக) 
2016    பி.பழனியப்பன் (அதிமுக)

2016 தேர்தல் முடிவுகள்  
பி.பழனியப்பன் (அதிமுக)    74,234 
அ.சத்தியமூர்த்தி (பாமக)    61,521 
பிரபு ராஜசேகர் (திமுக)    56,109 
பாஸ்கர் (மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக)    ..9,441 
ஜி.அசோகன் (கொமதேக)    ..1,760


வாக்காளர்களின் எண்ணிக்கை
(2019 ஜனவரி)
ஆண்கள்    1,26,685 
பெண்கள்    1,24,190 
திருநங்கைகள்.............03 
மொத்தம்    2,50,878 
மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை: 314

தேர்தல் அலுவலர்கள் தொடர்பு எண்கள்
தேர்தல் நடத்தும் அலுவலர்
டி.ஆர்.கீதா ராணி - 94425 78919
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
ஜெ.சுகுமார்- 94450 00535.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com