கிருஷ்ணகிரி

கல்லூரி மாணவியருக்கு ஊக்கப் பரிசுத் தொகை

DIN

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவியருக்கு ஆங்கில மொழி ஊக்கப் பரிசுத் தொகையை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.2.52 லட்சம் அண்மையில் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
2016-2017-ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவியருக்கு ஆங்கில மொழியில் திறன் மேம்படுத்தும் வகையில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் ஆங்கில மொழி திறன் மேம்பாடு, சமுதாய மேம்பாடு, ஆளுமைத் திறன் ஆகியவை குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக பயிற்சி வழங்கப்படுகிறது.மேலும், மூன்றாண்டு படிப்பில் ஒவ்வொரு பருவத் தேர்விலும் தோல்வியுறாமல் தேர்ச்சி பெறும் மாணவியருக்கு ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 320 மாணவியருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.2.52 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
கல்வி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், மாணவிகளை வாழ்த்தி பேசினார். இதுவரை இந்தக் கல்லூரிக்கு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.41 லட்சத்தில் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT