ஆணவக் கொலை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை

ஒசூரில் காதல் ஜோடி கடத்தி ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் புதன்கிழமை நேரில் விசாரணை நடத்துகிறது.

ஒசூரில் காதல் ஜோடி கடத்தி ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் புதன்கிழமை நேரில் விசாரணை நடத்துகிறது.
ஒசூர் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நந்தீஸ், அதே கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரைக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இந்த ஜோடியை பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் கடத்தி சென்று கொலை செய்தனர். அவர்களின் உடல் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை தொடர்பாக கர்நாடக மாநிலம், பெலகவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பெண்ணின் தந்தை உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தம்பதியின் சொந்த கிராமமான சூடுகொண்டப்பள்ளியில், கடந்த 5 நாள்களாக ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நந்தீஸ், சுவாதி ஜோடி கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல். முருகன் இன்று புதன்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம் வருகிறார்.
இன்று மாலை 4 மணி அளவில் ஒசூர் தாலுகா சூடுகொண்டப்பள்ளி கிராமத்துக்குச் செல்லும் அவர், அங்கு நந்தீசின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்துகின்றார். அதைத் தொடர்ந்து  கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் டாக்டர் பிரபாகர் மற்றும் மாவட்ட எஸ்.பி மகேஷ்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com