ஒசூரில் பட்டதாரி ஆசிரியர் கழகக் கூட்டம்

மாவட்ட தமிழ்நாடு  பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் ஒசூர் கல்வி மாவட்ட  புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும்

மாவட்ட தமிழ்நாடு  பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் ஒசூர் கல்வி மாவட்ட  புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அறிமுகக் கூட்டம் ஒசூர் அரசு  உருது மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஹரி தலைமை வகித்துப் பேசியது:
இச்சங்கம் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாகும். 1973 ஆம் ஆண்டு இரண்டாவது ஊதியக் குழு முதல் தற்போது 7-ஆவது ஊதியக் குழு வரை பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளைப் போராடி பெற்று தந்த சங்கம் என்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா பங்கேற்று சங்கத்தின் செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். கூட்டத்தில் ஒசூர் கல்வி மாவட்டத் தலைவராக பாகலூர் வெங்கடேசலு உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். ஒசூர் கல்வி மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுப்பது, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும், அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com