செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

சிலம்பாட்ட போட்டி

DIN | Published: 11th September 2018 09:32 AM

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.சிவரஞ்சன் தலைமை வகித்தார். மாவட்ட சிலம்பட்ட கழக செயலாளர் பவுன்ராஜ்,  நிர்வாகிகள் அம்முதாஸ், குருராகவேந்திரன் உள்ளிட்டோர் போட்டியை ஒருங்கிணைத்தனர். 
ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில்  வயது,  எடை பிரிவுகளைச் சார்ந்து போட்டிகள் நடைபெற்றன.  அதன்படி ஆண்கள் பிரிவில் திருநாவுக்கரசு, ஹேமநாதன், கனிஷ்சரண்,  எழில் அக்ஷயா,  தமிழ்நேசன்,  பரத்வாஜ், குருசரண்,  சூரியா, சரண்ராஜ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் மதுமல்,  தமிழ்மதி, ஹேமலதா, ஓவியா ஆகியோரும் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
மாநில அளவிலான போட்டி வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செப்.28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 

More from the section

தொழிலாளி கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை: ஒசூர் நீதிமன்றம் தீர்ப்பு
முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி பேரனுடன் முதியவர் தீக்குளிக்க முயற்சி
ஒசூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கொத்தடிமையாக இருந்த சிறுவன் மீட்பு
ஒசூரில் அனந்த்குமார் மறைவுக்கு அஞ்சலி