23 செப்டம்பர் 2018

பா.ஜ.க. மகாசக்தி, சக்தி கேந்திரம் ஆலோசனைக் கூட்டம்

DIN | Published: 11th September 2018 09:31 AM

பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட  பா.ஜ.க.வின் மகாசக்தி, சக்தி கேந்திரம் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பேருஹள்ளி முருகன் கோயிலில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி, மாநில விவசாய அணி துணைத் தலைவர் அஜய் பிரபாகரன், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சிவபிரகாஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சின்னசாமி வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது,  பிரதமரின் சாதனைகளை பிரசாரம் செய்வது, வாக்குச் சாவடி நிலையக் குழு அமைப்பது, புதிய கிளைகளை மாவட்டம் தோறும் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன. 
முன்னதாக பேருஹள்ளி பிரிவு சாலையில் கட்சிக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. 
இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட விவசாய அணி செயலாளர் எம்.கோவிந்தராஜ் நன்றி கூறினார். 

More from the section

போட்டித் தேர்வெழுதும் மாற்றுத் திறனாளிகள் கவனத்துக்கு...
ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது
கல்வி உதவி அளிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்த்துக் கொள்ள ஆட்சியர் அறிவுரை
புரட்டாசி சனி: பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு