சனிக்கிழமை 22 செப்டம்பர் 2018

பென்னாகரத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கண்டன பேரணி

DIN | Published: 11th September 2018 09:31 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக பென்னாகரம் வழக்குரைஞர்கள் சங்கத்தினர், பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்  அலுவலகம் வரை கண்டன பேரணி நடத்தினர். 
பேரணிக்கு  வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம்.சரவணன்  தலைமை வகித்தார்.  ஆர்.ஜானகிராமன் முன்னிலை வகித்தார் . பேரணியில் பங்கேற்ற வழக்குரைஞர் சங்கத்தினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இப்பேரணியில் வழக்குரைஞர் சங்க செயலாளர் பாலசரவணன், பொருளாளர் நரேந்திரன் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம்
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்வெட்டு பயிற்சி


பி.எஸ்.வி. பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை ஆசிரியர்கள் மனு


அதியமான் மகளிர் கல்லூரியில் நா.சீனிவாசன் நினைவு சொற்பொழிவு