வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு  7 ஆயிரம் கனஅடியாகக் குறைவு

DIN | Published: 12th September 2018 08:10 AM

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. 
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை  மாலை 5மணி நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்துவந்த நீர்வரத்து ,செவ்வாய்கிழமை காலை 9 மணி நிலவரப்படி  நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது.  மேலும்,  ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு  62-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.

More from the section

ஜெயம் கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவசர உதவிக்கு கட்செவி அஞ்சல் எண் அறிமுகம்

இருமூட்டு அறுவை சிகிச்சை: பென்னாகரம் அரசு மருத்துவர்கள் சாதனை
மொகரத்தையொட்டி கத்திபோடும் நிகழ்ச்சி


ஒசூரில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் இருவரிடம் விசாரணை