புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள்

DIN | Published: 12th September 2018 08:09 AM

கிருஷ்ணகிரியில்  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் சௌ.கீதா தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் கோவிந்த
ராசு போட்டிகளை
ஒருங்கிணைத்தார். 
இந்தப் போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள் என  10 கல்லூரிகளைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 
இதில்,  நடந்தாய் வாழி காவிரி என்ற தலைப்பில் கவிதைப் போட்டி, புதியதோர் உலகம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, மாறாதது ஏதுமில்லை, சிறகை விரி என்பன உள்ளிட்ட 16 தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டிக்கு
உதவிப் பேராசிரியர்கள் தனராசு,  சிவகாமி, ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராசு ஆகியோரும் கவிதைப் போட்டிக்கு உதவிப் பேராசிரியர் அஸ்ரப், கௌரவ விரிவுரையாளர் சுஜாதா ஆகியோரும், கட்டுரைப் போட்டிக்கு உதவிப் பேராசிரியர்கள் மாரியப்பன், சுரேஷ்குமார், கௌரவ விரிவுரையாளர் புஷ்பலதா ஆகியோரும் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

More from the section


கிருஷ்ணகிரியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
லஞ்ச வழக்கில் ஊராட்சி முன்னாள் செயலருக்கு ஓராண்டு சிறை
தேன்கனிக்கோட்டையில்  விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
பிரதமர் மோடி பிறந்த நாள்: பா.ஜ.க.வினர் ரத்த தானம்