தருமபுரி, கிருஷ்ணகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து,  தருமபுரியில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தி.மு.க.வினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசை கண்டித்து,  தருமபுரியில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தி.மு.க.வினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசினார். முன்னாள் அமைச்சர் வ.முல்லை வேந்தன், சட்டத் திட்டத் திருத்தக் குழு இணைச் செயலர் இரா.தாமரைச்செல்வன்,  பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், குட்கா ஊழல், உள்ளாட்சித் துறையில் ஊழல் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், சிபிஐ சோதனைக்குள்ளான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவரை நியமிக்க வேண்டும். சோதனைக்குள்ளான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நகரச் செயலர் டி.பி.தங்கராஜ், பேச்சாளர்கள் கீரை விஸ்வநாதன், செந்தாமரைக் கண்ணன், நிர்வாகி பி.சி.ஆர். மனோகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில்  கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், செவ்வாய்க்
கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் இ.ஜி.சுகவனம், சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், நகரச் செயலாளர் நவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், ஊழல் புரிவோருக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கையில் ஏந்தி முழக்கங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒசூரில்...
மாநில அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒசூர் ரயில் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
ஆர்ப்பாட்டத்துக்கு  தளி எம்.எல்.ஏ.வும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலருமான ஒய்.பிரகாஷ் தலைமை வகித்தார். வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ்,  தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன்,  மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளர் வி.விஜயகுமார்,  மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எல்லோரா மணி, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், தொ.மு.ச. மஞ்சுநாத், வேப்பனஹள்ளி, ஒசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி, அஞ்செட்டி ஒன்றியச் செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com